Sunday, September 25, 2011

மைக்ரோசாஃப்ட்டின் டாட்நெட் (Microsoft Dot Net)




இன்டர்நெட்டுக்கான அப்ளிகேஷன்கள் எத்தனையோ மொழிகளில் எழுதப்படுகின்றன. அப்ளிகேஷனில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள தனித்த கூறுகள் காம்பொனன்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரே மொழியில் எழுதப்பட்ட காம்பொனன்டுகள் தமக்குள்ளே தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்ட காம்பொனன்டுகள் தமக்குள் உறவாடிக் கொள்ள வழிமுறை ஏதுமில்லை. அத்தகைய வழிமுறை இருக்குமெனில் இன்டர்நெட் உலகில் நினைத்துப் பார்க்க முடியாத நவீன முன்னேற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பது கண்கூடு. பல்வேறு பணித்தளங்களில் செயல்படக் கூடிய ஜாவா மொழி இத்தேவையை நிறைவு செய்யவில்லை.
பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட புரோகிராம்களும் ஒன்றுக்கொன்று இயைந்து செயல்படக் கூடிய ஒரு பணித்தளத்தை (platform) உருவாக்குவதில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கவனம் செலுத்தியது. இக்கால கட்டத்தில்தான், ஏற்கெனவே வெளியிடப்பட்ட விசுவல் ஸ்டுடியோவின் அடுத்த பதிப்பை வெளியிடும் வேலையில் மைக்ரோசாஃப்ட் ஈடுபட்டிருந்தது. தன்னுடைய சொந்தத் தேவை, புறச்சூழ்நிலைகளின் தாக்கம், சந்தையில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க வேண்டிய கட்டாயம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த விளைவாக, மைக்ரோசாஃப்ட் 1990-களின் இறுதியில் டாட்நெட் (.NET) தொழில்நுட்பத்தை அறிவித்தது.

- நன்றி மு.சிவலிங்கம் -

Friday, September 16, 2011

Windows 8

Windows 8 அனைவரும் எதிர்பார்த்து இருக்கும் Microsoft குழுமத்தின் வெளிவர இருக்கும் புதிய வெளியீடு. இது வழமையை விட முற்றிலும் வேறுபட்ட பல தொழில்நுட்பங்கள்  புகுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக Touch Screen Technology முற்று முழுதாக புகுத்தப்பட்டுள்ளது. முன்னைய Windows 7  இல் குறிப்பிட சில functions மட்டும் தான் தொடுதிரை  தொழில் நுட்பத்தில் இயங்க வல்லவை.. ஆனால் இது முற்று முழுதாக தொடுதிரை  தொழில் நுட்பத்தில் இயங்கும்.. ஆனாலும் சாதாரண Windows பவனையளர்களும் இதை பாவிக்கலாம்.. வேகமாக வளர்ந்து  வரும் இந்த Global Technology இல் அனைவரும் மடிக்கணணிகளைத்தான் பாவிக்கிறார்கள்.. எனவே தான் Microsoft குழுமம் புதிய விசப்பரிட்சைல் இறங்கி உள்ளது.. மேலும் தன்னுடன் ஒப்பந்தம் கொண்டுள்ள சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தின் கட்டமைப்பினை வழங்கியுள்ளது. அவர்களும் தொடுதிரை அமைப்பில் இயங்கக் கூடிய அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தயாரித்து வருகின்றன. ஆனாலும் இந்த புதிய தொழில்நுட்பத்தில் பெரிதும் பயன் பெறுபவர்கள் Windows platform Software Developers/Engineers குறிப்பாக .net Developers ஏன்னெனில் இதன் இயங்குதளம் .நெட் framework க்கு அமைவாகவே அமைக்கப்பட்டுள்ளது.. அதுமட்டுமன்றி இணைய உலாவி (Internet Explore) முற்றிலும் புதிய தொழில்நுட்பம் புகுத்தபடுகிறது. ஏன்னெனில் தற்சமயம் அதிக இணைய பாவனையாளர்கள் பாவிப்பது Google Chrome ஏன்னெனில் இது தன்னகத்தே Flash player, Acrobat Reader, Word, Excel, Image reader போன்ற தொழிநுட்பத்தை மேலதிகமாக Install பண்ணாமலே பெற்றுக்கொள்ள முடியும். இதனால் குறைந்த நாட்களிலே அதிக இணைய பாவனையாளர்களின் மனதை Fire fox யும் தாண்டி பெற்று விட்டது.. இது Internet Explore க்கு கிடைத்த பேர் இடி. இதனை மாற்றி அமைக்க Microsoft குழுமத்திக்கு தேவை இருக்கு அதனால் என்னமோ விண்டோஸ் எக்ஸ்புளோரரின் செயல்பாட்டில் அதிகக் கவனம் விண்டோஸ் 8 தொகுப்பில் காட்டப்படுகிறது. கொப்பி, மூவ், ரீ நேம், டெலீட் எனப் பல செயல்பாடுகளை நாம் அடிக்கடி இதில் மேற்கொள்கிறோம். இந்த ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு விண்டோவினை இதுவரை ஓபரேட்டிங் சிஸ்டம் தந்து வந்தது. விண்டோஸ் 8 தொகுப்பில் இவை அனைத்தும் ஒரே விண்டோவில் இருக்கும். இதன் மூலம் பெரிய கோப்புகள், குறிப்பாக வீடியோ மற்றும் புகைப்பட கோப்புகளை எளிதாக ஒரே இடத்தில் கையாள முடியும்.இன்னும் தொடர்ந்து பல புதிய கட்டளைகளையும் வசதிகளையும் உள்ளடக்கியதாக விண்டோஸ் 8 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.